இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் விலையுயர்ந்த கார் திருட்டு

       பதிவு : Apr 03, 2018 13:00 IST    
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் கார் திருடப்பட்டுள்ளதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் கார் திருடப்பட்டுள்ளதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசைஞானியின் இளைய மகன். இவருடைய இசையமைப்பில் உருவாகியுள்ள 125வது படமான விஷாலின் 'இரும்புத்திரை' ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இவருடைய இசையமைப்பில் தற்போது சண்டக்கோழி 2, சந்தன தேவன், சூப்பர் டீலக்ஸ், கொலையுதிர் காலம், ராஜா ரங்குஸ்கி, பேய் பசி, பியார் பிரேம காதல், என்ஜிகே, மாரி 2, கண்ணே கலைமானே போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதன் பிறகு இவர் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார். 

இந்நிலையில் யுவன் வைத்திருந்த விலையுயர்ந்த கார் திருடு போனதாக சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவருடைய ஓட்டுநர் நவாஸ் கான் தான் அந்த காரை திருடிச் சென்றதாக அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தற்போது காவல் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நவாஸ் கானை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

 


இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் விலையுயர்ந்த கார் திருட்டு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்