சூர்யா 36வது படத்தின் முதல் ட்யூன் தகவலை வெளியிட்ட யுவன்

       பதிவு : Feb 09, 2018 10:40 IST    
yuvan shankar raja suriya 36 first song finish yuvan shankar raja suriya 36 first song finish

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் இன்னும் பெயரிடப்படாத சூர்யாவின் 36வது படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பை படமாக்கப்பட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை படக்குழு துவங்கியுள்ளது.  ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரு நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளனர். இவர்கள் சூர்யாவுடன் முதல் முறையாக இப்படத்தின் மூலம்  இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இணையமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இசையமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த யுவன் இசையின் ஒரு தகவலை ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ளார். அதில் 'கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த காம்போசிங்கின் இறுதியில் செல்வராகவன் படத்திற்கு ஒரு நல்ல அற்புதமான ட்ராக் கிடைத்துள்ளது.....பொற்கால நாட்கள் திரும்பியது....நீங்கள் மாறவேயில்லை' என்று பதிவு செய்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இயக்குனர் செல்வராகவன் அவரது ட்விட்டரில் 'நீங்கள் மேஸ்ட்ரோ இல்லை..உங்களுடன் இணைந்து இந்த மேஜிக் உருவாகுவது ஆனந்தமே' என்று பதிவு செய்துள்ளார். 

 

மேலும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தெலுங்கு திரையுலகின் பிரபலம் ஜெகபதி பாபுவிடம் தற்பொழுது பேச்சிவார்த்தை நடைபெற்று இருப்பதாக தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது.இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்னும் சில நாட்களில் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 


சூர்யா 36வது படத்தின் முதல் ட்யூன் தகவலை வெளியிட்ட யுவன்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்