டிசம்பர் 8ல் களமிறங்கும் படங்கள்

       பதிவு : Nov 27, 2017 15:25 IST    
December 8 release movies December 8 release movies

‘உளிதவரு கண்டன்டே’ என்ற கன்னட படத்தின் ரீ-மேக்கில் அறிமுக இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கி வரும் 'ரிச்சி' படத்தில் நிவின் பாலி ரவுடி கெட்டப்பில் ஹீரோவாக நடித்துள்ளார். இது நிவின் பலியின் முதல் தமிழ் நேரடி படம் என்பது குறிப்பிட்ட தக்கது. இந்த படத்தின் பஸ்ட் லுக், ட்ரைலர், இசை போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் வருகிற டிசம்பர் மாதம் 8ம் தேதி திரையிட உள்ளனர்.      

ரிச்சி வெளியாகும் அதே தேதியில் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'சத்யா' படமும் வெளிவர உள்ளது. இந்த படம் தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற ‘க்‌ஷணம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பட்ட தக்கது. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இப்படத்தில் ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.    

 

இந்த இரு படங்களுடன் இணைந்து கிருஷ்ணாவின் 'வீரா' படமும் வெளிவர உள்ளது. ராஜாராமன் இயக்கும் இப்படத்தினை வசந்த் மூவிஸ் & ஆரஞ்சு கிரேஷன் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து உள்ளார். ஐஸ்வர்யா மேனன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ராஜேந்திரன், யோகி பாபு, தம்பி ராமையா, சரந்தீப், ஆடுகளம் நரேன், ராதா ரவி, கன்னி ரவி, கார்த்திக் நாகராஜன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.   


டிசம்பர் 8ல் களமிறங்கும் படங்கள்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்