தனுஷ் முதல் முதலாக நடிக்கும் ஹாலிவுட் படத்தின் ரிலீஸ் தேதி

       பதிவு : Feb 10, 2018 09:39 IST    
dhanush hollywood movie release from may 30th dhanush hollywood movie release from may 30th

'வேலையில்லா பட்டதாரி 2' படத்தினை தொடர்ந்து என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, மாரி 2, ஹாலிவுட்டில் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர் போன்ற பல படங்களில்  நடிகர் தனுஷ் பிசியாக நடித்து வருகிறார். இவர் கோலிவுட், டோலிவுட், பாலிவுட்ட போன்ற திரையுலகிற்கு அடுத்ததாக முதல் முதலில் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தின் மூலம் ஹாலிவுட்டில் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த நாட்களில் துவங்கப்பட்டு தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இந்த படத்தில் ஹாலிவுட்டில் பிரபலமான பெரினிஸ் பெஜோ, பர்கட் அப்டி, எரின் மொரியர்டி, ஆபெல் ஜாஃப்ரி போன்றவர்கள் தனுஷுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.      

மேலும் இப்படத்தின் மூலம் முதல் முறையாக மேஜிக் மேன் கதாபாத்திரத்தையும் தனுஷ் கையாண்டுள்ளார். இந்த படத்தில் தனுஷ்  அஜாதசத்ரு எனும் கேரக்டரில் ஒரு இளைஞனாக நடித்ததோடு படம் முழுக்க தன்னுடைய தந்தையை தேடி அலையும் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை மேற்கொண்டு உள்ளார். 'சோனி பிக்சர்ஸ்' நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படம் ரோமன் ப்யூர்டோலஸ் எழுதிய 'The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe' என்ற புத்தகத்தை தழுவி உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. காமெடிகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தின் புதுவித போஸ்டரை தனுஷ் அவரது ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ளார். மேலும் படத்தினை வருகிற மே மாதம் 30ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  

 


தனுஷ் முதல் முதலாக நடிக்கும் ஹாலிவுட் படத்தின் ரிலீஸ் தேதி


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்