ads

ஒரு வழியாக வெளியானது தனுஷின் வட சென்னை அடுத்த அப்டேட்

நீண்ட காலங்களாக உருவாகி வரும் வட சென்னை படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது ட்ரைலர் மற்றும் வெளியீடு தேதியினை படக்குழு அறிவித்துள்ளது.

நீண்ட காலங்களாக உருவாகி வரும் வட சென்னை படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது ட்ரைலர் மற்றும் வெளியீடு தேதியினை படக்குழு அறிவித்துள்ளது.

விசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் 'வட சென்னை'. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் பிறகு முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாகத்தின் ட்ரைலர் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதன் பிறகு இந்த படத்தின் முதல் பாகத்தினை செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.

சென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்து வருகிறார். முதலில் இந்த படத்தில் நாயகனாக நடிக்க கார்த்தி, சிலம்பரசன், ஜீவா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த படம் தாமதமாகி வந்ததால் இந்த படத்திலிருந்து அவர்கள் விலக தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு நாயகனாக நடித்து வருகிறார். இந்த கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.

இந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் அப்டேட்டுக்காக நீண்ட காலங்களாக ரசிகர்கள் காத்திருந்த தருவாயில் தற்போது ட்ரைலரில் வரும் ஜூலையில் படக்குழு வெளியிட உள்ளது. மேலும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. இது தவிர இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது.

வட சென்னை முதல் பாகத்தின் ட்ரைலர் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளது.வட சென்னை முதல் பாகத்தின் ட்ரைலர் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளது.

ஒரு வழியாக வெளியானது தனுஷின் வட சென்னை அடுத்த அப்டேட்