ads
வட சென்னை மாரி 2 படங்களுக்கு பிறகு உருவாகவுள்ள தனுஷின் படங்கள்
வேலுசாமி (Author) Published Date : May 29, 2018 12:00 ISTMovie News
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷ் நடிப்பில் தற்போது வட சென்னை, என்னை நோக்கி பாயும் தோட்டா, மாரி 2, தி எக்ஸ்டரார்டினரி ஜர்னி ஆப் பகிர் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஹாலிவுட் படமான தி எக்ஸ்டரார்டினரி ஜர்னி ஆப் பகிர் (The Extraordinary Journey of the Fakir) நாளை வெளியாகவுள்ளது. நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படத்தை திரையிடுவதற்காக தனுஷ் பிரான்ஸ் சென்றிருந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர் தற்போது பகிர் படத்தின் ப்ரோமொசனில் பிசியாக உள்ளார். ப்ரோமோஷனை முடித்த பிறகு தாய் நாடு திரும்பியவுடன் 'மாரி 2' படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கி வரும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி மற்றும் கிருஷ்ணா, வரலட்சுமி, டோவினோ தாமஸ், கலக்க போவது யாரு அறந்தாங்கி நிசா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வட சென்னை படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு புதுபடம் ஒன்றை இயக்கி அதில் அவரே நாயகனாக நடிக்க உள்ளார்.
இந்நிலையில் தனது நடிப்பில் மேலும் இரண்டு படங்கள் உருவாகவுள்ளதாக நடிகர் தனுஷ் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உறுதி படுத்தியுள்ளார். அதன் படி தனுஷ் அடுத்ததாக தன்னை பாலிவுட்டிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இவர் 2013இல் வெளியான அம்பிகாபதி படத்தை இயக்கியவர். இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து 'ஜீரோ' படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் ஆனந்த் எல் ராய் படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த தகவல் முன்னதாக வெளியான நிலையில் இதனை தற்போது உறுதிபடுத்தியுள்ளார்.
adsவளர்ந்து வரும் இயக்குனரான கார்த்திக் சுப்பராஜ் தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்க உள்ளார். இவருக்கு பிறகு அதாவது மாமனாரை தொடர்ந்து மருமகனையும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார். மேலும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் வெற்றிக்கு பிறகு இதன் மூன்றாம் பாகத்தையும் எடுக்க முடிவு செய்துள்ளனர். இது தவிர இசையமைப்பாளர் அனிருத் அடுத்த வருடத்தில் தனுசுடன் இணைவதாக தெரிவித்திருந்தார். இவர் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இணைவாரா அல்லது விஐபி 3 (வேலையில்லா பட்டதாரி 3) படத்தில் இணைவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வட சென்னை மாரி 2 படங்களுக்கு பிறகு உருவாகவுள்ள தனுஷின் படங்கள்
-   Tags : 
வேலையில்லா பட்டதாரி 2
ஆனந்த் எல் ராய்
அம்பிகாபதி
Velaiyilla Pattathari 3
Aanand L. Rai
Raanjhana
கார்த்திக் சுப்பராஜ்
தனுஷ்
அனிருத்
dhanush
karthik subbaraj
dhanush karthik subbaraj movie
dhanush anirudh team up again with karthik subbaraj or VIP 3
dhanush team up again with anand L.Rai
வட சென்னை மாரி 2 படங்களுக்கு பிறகு உருவாகவுள்ள தனுஷின் படங்கள்
the extra ordinary journey of the fakir release from may 30th
Related News
ads