ads

வட சென்னை படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் வெற்றி மாறன்

வட சென்னை படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி அளித்துள்ளார்.

வட சென்னை படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் தற்போது 'வட சென்னை' படம் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் இசை போன்றவை வெளியாக உள்ளது. வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ள இந்த படம் இரண்டு பாகமாக உருவாக உள்ளது.

இந்த படம் குறித்து இயக்குனர் வெற்றி மாறன் அளித்த பேட்டியில் "இந்த படத்தில் தனுஷ் கேரம் போர்ட் பிளேயராக அன்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் உலக சேம்பியனாக வேண்டும் என்பது இவருடைய கனவு. இந்த படத்தில் 15 வயது முதல் 30 வயது வரை அன்பு கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். படப்பிடிப்பின் இடையில் இந்த படத்தின் பட்ஜெட்டுக்காக இரண்டு கமர்சியல் படங்களை நடித்து முடித்துவிட்டு வந்தார். இந்த படத்திற்கு அவருடைய உழைப்பு மறக்க முடியாதது.

இந்த படத்தில் தயாரிப்பாளராகவோ, இயக்குநராகவோ தனுஷ் நடந்தது கிடையாது. எந்த காட்சியாக இருந்தாலும் இப்படி சொல்லலாமா? என்று தான் கேட்பார்.  இந்த படத்தில் ஆண்ட்ரியாவுக்கு காலத்தால் மறக்க முடியாத கதாபாத்திரம். இந்த படம் முடிவான பிறகு ஆரம்பத்தில் இருந்தே மாறாத ஒரே நடிகை ஆண்டிரியா தான். ஏனென்றால் இந்த படத்தில் அவருடைய சந்திரா கதாபாத்திரத்திற்கு அவர் தான் பொருத்தமானவர். மாடர்னான அவருக்கு மெட்றாஸ் பாஷை தெரியாது இருந்தாலும் அதை சரி பண்ணினார்.  

இந்த படத்தில் அவர் உயிரை கொடுத்து நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியாவுக்கு நேரெதிரானவர். சென்னையை சேர்ந்த தமிழ் தெரிந்த திறமையான நடிகை. இந்த படத்தில் அவருடைய அறிமுக காட்சியே சண்டை காட்சியில் தொடங்கும். இவருடன் பணி புரியும் போது மொழி தெரியாத நடிகைகளுடன் பணிபுரிவது எவ்வளவு பின்னடைவு என்பதை உணர்ந்தேன்.இந்த படத்தில் 30 வருடங்களின் வாழ்வியல் பதிவுகளான உலககோப்பை வெற்றி, அரசியல் தலைவர் உயிரிழப்பு, பல அரசியல் மாற்றங்கள் போன்ற அனைத்தும் இடம் பெறும். இந்த படத்தை முதலில் ஒரு பாகமாக உருவாக்க இருந்தோம்.

ஆனால் இந்த படத்தின் கதையும், கதாபாத்திரமும் அவ்வளவு இருந்ததால் இதை இரண்டு பாகமாக எடுக்க முடிவு செய்தோம். ஆனால் இது விமர்சனங்கள் ரீதியாகவும், ரசிகர்களின் வரவேற்பை பொருத்து தான் அமையும். எல்லாம் நன்றாக நடந்தால் தமிழ் சினிமாவில் இந்த படம் புதுவித முயற்சியாக இருக்கும். இந்த படத்தில் தனுஷ், சமுத்திரக்கனி, சுப்ரமணியம் சிவா, அமீர் போன்ற இயக்குனர்கள் நடிப்பது ரொம்ப வசதியாக இருக்குறது. இந்த படத்தில் ஹீரோவும் கிடையாது, வில்லனும் கிடையாது. ஒவ்வொரு நடிகர்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் மொத்தம் நான்கு பாடல்கள். அதில் ஒரு பாடல் முழு கானா பாடலாக உருவாகியுள்ளது. சென்னை மக்களின் வாழ்வியலை கொண்டு இந்த படத்தின் களம் உருவாகியுள்ளது. இந்த மக்களின் நிலம் பறிக்கப்பட்டு வாழ்வதற்கு இடமில்லாமல் நெருக்கடிக்கு தள்ளப்படும் போது அந்த மக்கள் என்ன செய்வார்கள்? எப்படி போராடுவார்கள்?..இந்த போராட்டமும், அந்த மக்களின் வாழ்வியலும் தான் இந்த படத்தின் மொத்த கதை.

தனுஷ் நடிக்கும் அன்பு என்ற கதாபாத்திரத்திற்கு வட சென்னை மக்கள் பலம் சேர்ப்பார்கள். இந்த படத்தில் ஒவ்வொருத்தருக்கும் அழுத்தமான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளோம். 'குணா' என்ற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி, 'ராஜன்' என்ற கதாபாத்திரத்தில் அமீர், 'செந்தில்' என்ற கதாபாத்திரத்தில் கிசோர், 'தம்பி' கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, 'சந்திரா' என்ற கதாபாத்திரத்தில் 'ஆண்ட்ரியா', 'பத்மா' கதாபாத்திரத்தில் 'ஐஸ்வர்யா ராஜேஷ்' போன்ற அனைவரும் வட சென்னையின் அசல் மனிதர்கள் தான்." என்று அவர் தெரிவித்துள்ளார்.

வட சென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.வட சென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

வட சென்னை படம் குறித்து மனம் திறந்த இயக்குனர் வெற்றி மாறன்