ads

இறுதி கட்டத்தை எட்டிய தனுஷின் - வட சென்னை

Vada Chennai team still

Vada Chennai team still

விசாரணை படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கி வரும் 'வட சென்னை' படத்தில் தனுஷ் நாயகனாக நடித்து வருகிறார். இவருடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யன் சிவா உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

கேங்க்ஸ்டர் த்ரில்லராக உருவாகிவரும் இப்படத்தினை வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனம் மற்றும்  தனுஷுயின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.  

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 3 வாரங்களில் படத்தின் அனைத்து ஷுட்டிங்கும் முடிவடைய இருப்பதாக தகவல் வந்துள்ளது.      

இதனை அடுத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி 2' படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் 'ப்ரேமம்' புகழ் சாய் பல்லவி நாயகியாக நடிக்க இருக்கிறார்.  

இறுதி கட்டத்தை எட்டிய தனுஷின் - வட சென்னை