ads

சமூக வலைத்தளத்தில் ராணுவ உடையில் வலம் வரும் கமல்ஹாசன்

vishwaroopam 2 movie shooting

vishwaroopam 2 movie shooting

சென்னை ஓ.டி.ஏ ராணுவ முகாமில் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் 'விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 2013-ஆம் ஆண்டு வெளிவந்த 'விஸ்வரூபம்' படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த பாகத்தையும் இயக்கி வருகின்றனர். விஸ்வரூபம் 2 படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்த நிலையில் மீதமுள்ள காட்சிகளை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் அவரது சமூக வலைத்தளத்தில் ராணுவ உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அவர் பதிவிட்ட கருத்தில் "தமிழ் மற்றும் இந்தியில் தயாராகி வரும் விஸ்வரூபம் 2 படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் பெண்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கபடுகிறது. இந்த ஓ.டி.ஏ ராணுவ முகாம் என்னையும் நாட்டையும் பெருமைபடுத்துகிறது. பெண்களுக்கு எனது மரியாதையை தெரிவிக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் இம்மாத இறுதிக்குள் வெளிவர தயாராகி வருகிறது. இந்த படம் ஜனவரி 26-இல் வெளிவரும் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சமூக வலைத்தளத்தில் ராணுவ உடையில் வலம் வரும் கமல்ஹாசன்