ads

பத்மாவதி படத்திற்கு கமல் ஹாசன் ஆதரவு

kamal haasan supports padmavati movie

kamal haasan supports padmavati movie

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக கொண்டு 'பத்மாவதி' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராணி பத்மினியின் வாழ்க்கை தவறாக சித்தரிக்க பட்டுள்ளதாக ராஜ்புட் சமூகத்தினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பத்மாவதி படத்தின் படப்பிடிப்பின் போது பொருட்களை சேதப்படுத்தியும் ஊழியர்களை காயப்படுத்தியும் வந்தனர். இந்த சம்பவத்தில் இயக்குனருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து பத்மாவதி படத்தை வெளியிடக்கூடாது என்றும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் ராஜ்புட் சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதை அடுத்து இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தலையையோ நடிகை தீபிகா படுகோனே தலையையோ கொண்டு வருவபர்களுக்கு 5 கோடி வழங்கப்படும் என்று தெரிவித்து வருகின்றனர். இதனால் இயக்குனர் மற்றும் தீபிகா படுகோனே வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் பத்மாவதி படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "நடிகை தீபிகா படுகோனேவை பாதுகாக்க வேண்டும். என்னுடைய படத்திற்கும் இது போன்ற எதிர்ப்புகள் வந்தது. உடலுக்கு தலை எந்த அளவிற்கு முக்கியமானதோ அதுபோல அவரது சுதந்திரமும் முக்கியம் என்பது மறுக்கக்கூடாது. வன்முறையுடன் கூடிய எந்த விவாதமும் மோசமானது. நாங்கள் போதுமான அளவிற்கு சொல்லிவிட்டோம். இது விழித்தெழ வேண்டிய நேரம் "என்று அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

பத்மாவதி படத்திற்கு கமல் ஹாசன் ஆதரவு