நந்தி விருதுக்கு கமல் ஹாசன் ரஜினிகாந்த் மற்றும் பாகுபலி தேர்வு

       பதிவு : Nov 15, 2017 12:19 IST    
நந்தி விருதுக்கு கமல் ஹாசன் ரஜினிகாந்த் மற்றும் பாகுபலி தேர்வு

ஆந்திர அரசின் சார்பில் திரைப்பட துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு நந்தி விருது ஒவ்வொரு வருடத்திற்கும் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு நந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2016-ஆம் ஆண்டுக்கு ரஜினிகாந்த், 2015-ஆம் ஆண்டுக்கு ராகவேந்திரா ராவ் மற்றும் 2014-ஆம் ஆண்டுக்கு கமல்ஹாசனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் சிறந்த திரைப்பட விருது வழங்கவுள்ளது. அதில் தேசிய விருது பெற்ற திரைப்படமான பாகுபலி 2015-ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக பெல்லி சுப்புலு திரைப்படமும், 2014-ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த லிஜெண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச முதல் மந்திரி சந்திர பாபு நாயுடு இந்த பட்டியலுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். 

 

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அவர்கள் டிவிட்டரில் எங்களை ஆந்திர அரசின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.


நந்தி விருதுக்கு கமல் ஹாசன் ரஜினிகாந்த் மற்றும் பாகுபலி தேர்வு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்