ads

'அறம்' படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

'அறம்' படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

'அறம்' படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

நடிகை நயன்தாரா நடிப்பில் இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'அறம்'. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் வெளிவந்தது. மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப இந்த படம் மக்களின் மத்தியில் இடம் பிடித்திருக்கிறது.

படத்தை பார்த்த பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்திற்கு இயக்குனர் சுசீந்திரன், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் விஜய், விக்னேஷ் சிவன், அமலா பால், ஆர் ஜெ பாலாஜி  உள்ளிட்டோர் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். 

இதனை அடுத்து நடிகை நயன்தாரா 'அறம்' படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக பல்வேறு திரையரங்கிற்கு சென்று வருகிறார். தற்போது நடிகர் ரஜினிக்கு சிறப்பு காட்சியாக காண்பிக்க பட்டது. இந்த படத்தை பார்த்த அவர் 'அறம்' சமூகத்திற்கு தேவைப்படும் படம் என்று பாராட்டியுள்ளார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜெ ராஜேஷ் தயாரித்துள்ளார். ஆட்சியராக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு கிப்ரான் இசையமைத்துள்ளார்.

'அறம்' படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்