ads
டிஜிட்டலுக்கு மாறும் கமல்ஹாசனின் பழைய படங்கள்
யசோதா (Author) Published Date : Nov 15, 2017 20:03 ISTபொழுதுபோக்கு
பிளாக் அண்ட் வைட் காலத்தில் இருந்த சினிமா திரையுலகம் தற்போது டிஜிட்டலுக்கு மாறியுள்ளது. அதற்கேற்றாற் போல் முந்தய காலங்களில் அனைவராலும் பேச பட்ட படங்களை தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றும் பழக்கம் திரையுலகினரிடையே இருந்து வருகிறது. இதுவரை எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த படங்களான உலகம் சுற்றும் வாலிபன், நம்நாடு, ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சிவாஜி கணேசன் நடித்த படங்களான வீரபாண்டிய கட்டபொம்மன், வசந்த மாளிகை, கர்ணன், பாசமலர் உள்ளிட்ட பல படங்கள் டிஜிட்டலில் வெளிவந்தது. தற்போது கமல் ஹாசன் நடித்த பழைய படங்களையும் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளது.
விரைவில் அரசியலில் களம் இறங்கவுள்ள நடிகர் கமல் ஹாசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது இந்த கமல் ஹாசனின் டிஜிட்டல் படங்களுக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தற்போது கமல் ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த 'மீண்டும் கோகிலா' படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாற்றும் பணி முடிந்துள்ளது. அடுத்த மாதம் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. மேலும் கமல் ஹாசன் நடித்த காக்கிசட்டை, காதல் பரிசு படங்களை டிஜிட்டலில் மாற்றும் பணி நடந்து வருகிறது. அபூர்வ சகோதரர்கள், விக்ரம், தூங்காதே தம்பி தூங்காதே ஆகிய படங்களையும் டிஜிட்டலில் மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.