ads

நடிகர் கமல்ஹாசன் மற்றும் விஷாலை பற்றி நடிகர் கார்த்தி

Theeran adhigaram ondru press meet

Theeran adhigaram ondru press meet

கார்த்தி நடித்துள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் வரும் 17-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. இந்த படம் தெலுங்கில் 'காக்கி' என்ற தலைப்பில் வெளியாகிறது. ஐதராபாத்தில் இதன் அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கூறியதாவது "தீரன் படத்தில் முற்றிலும் ஒரு உண்மையான போலீசை பார்க்கலாம். மற்ற படங்களை போன்று சத்தமாக வசனம் பேசுவது போல் இந்த படத்தில் இல்லை. நிஜவாழ்க்கையில் ஒரு போலீஸ் அதிகாரி எப்படி நடந்து கொள்வாரோ அப்படியே நானும் நடித்துள்ளேன். கடந்த 1995 - 2000 வரை நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

சில விஷயங்களை வைத்து ஒட்டு மொத்த காவல்படை மீது பழி போடுவது தவறு. சமீபத்தில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த சம்பவத்தை கேள்விபட்டபோது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என தோன்றியது. அதற்காக அரசியலுக்கு வருவது சரிப்பட்டு வராது. எனக்கு கல்யாணம் நடந்துவிட்டதால் அரசியலுக்கு வர எனக்கு நேரம் இல்லை. விஷாலுக்கு இன்னும் திருமணம் ஆகாததால் அவர் அரசியலுக்கு வர பொருத்தமானவர். கமல்ஹாசன் நல்ல அரசியல்வாதியாக வரலாம். எந்த விஷயமானாலும் அதை தெரிந்து கொண்டு தான் இறங்குவார். அவரை மக்கள் எளிதில் அணுகலாம்" என்று கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் விஷாலை பற்றி நடிகர் கார்த்தி