கார்த்தி தெலுங்கில் ஹிட் அடித்த காக்கி பாடல்

       பதிவு : Nov 11, 2017 08:18 IST    
கார்த்தி தெலுங்கில் ஹிட் அடித்த காக்கி பாடல்

கார்த்தி காவல் துறை அதிகாரியாக தற்பொழுது நடித்த தீரன் அதிகாரம் ஒன்று வெளிவர உள்ளது. சதுரங்க வேட்டை படத்தினை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தின் பஸ்ட் லுக், டீசர், ட்ரைலர் போன்றவை முன்னதாகவே வெளிவந்து நல்ல வரவேற்பினை தமிழில் பெற்றுள்ளது.      
ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் காக்கி என்ற தலைப்பில் வெளிவரவுள்ள இப்படத்திற்கு அதிகளவு வரவேற்புகளை ரசிகர்கள் தந்துள்ளனர்.

இந்நிலையில் முன்பு வெளிவந்த படத்தின் டீசர், ட்ரைலர் போன்றவைக்கு  தமிழில் ஏற்பட்ட வரவேற்பினை போன்று தெலுங்கிலும் இருந்தது. மேலும் 'அடுகே பிடுகே அத்தேடே கொடுகா', 'சின்னி சின்னி அஷாலேவோ', 'டிங்க டிங்க' போன்ற தெலுங்கில் இடம் பெற்ற படத்தின் பாடலுக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்திருந்தது.   

 

தோழா படத்தினை தெலுங்கில் வெளியிட்டதன் காரணத்தினால் தெலுங்கிலும் ஒரு ரசிகர்களின் வட்டாரத்தினை கார்த்தி பிடித்துள்ளார். இந்த காரணத்தினால் தமிழ் திரையுலகை போன்று தெலுங்கிலும் அதிகளவு வரவேற்புகள், படத்திற்கான எதிர்பார்ப்புகளும் அதிகளவு இருப்பதாக கூறுகின்றனர்.         


கார்த்தி தெலுங்கில் ஹிட் அடித்த காக்கி பாடல்


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்