ads

கார்த்தி நடிக்கும் படத்திற்கு பூஜை

கார்த்தி நடிக்கும் படத்திற்கு பூஜை

கார்த்தி நடிக்கும் படத்திற்கு பூஜை

சிறுத்தை படத்திற்கு தொடர்ந்து காவல் துறை அதிகாரியாக 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கார்த்தி நடித்து வெளிவரவுள்ளது. வினோத் இயக்கிய இப்படத்தினை வருகிற 17ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் கார்த்தி அடுத்த படத்தில் கமிட்டாகி இருந்தது முன்பே அறிந்த தகவல். கார்த்தி நடிக்க இருக்கும் இந்த புது படத்தினை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில் படத்திற்கான பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. பூஜை நடைபெறும் போது எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இயக்குனர் பாண்டிராஜ், சூர்யா, சிவகுமார், சத்யராஜ், கார்த்தி, சாயியேஷா, சூரி, ராஜசேகர் பாண்டியன், ஸ்ரீமான் உட்பட பலர் கலந்து கொண்டு பூஜையை சிறப்பித்தனர். 2டி என்டர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் காமெடி நிறைந்து காணப்படுவதாக கூறப்படுகின்றனர்.

இந்த படத்தில் கார்த்தி, சாயியேஷா , சூரி, ஸ்ரீமான் இவர்களுடன் இணைந்து சத்யராஜ் உள்பட இன்னும் பலர் நடிக்கவுள்ளனர். இதன் பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவிக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கார்த்தி நடிக்கும் படத்திற்கு பூஜை