பத்மாவதி ரிலீஸ் தேதியை தள்ளிவைத்த இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி

       பதிவு : Nov 20, 2017 13:45 IST    
padmavati movie release date postboned padmavati movie release date postboned

பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தற்பொழுது பத்மாவதி படத்தினை இயக்கிவருகிறார். ராஜஸ்தானில் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுத்து வரும் இப்படத்தில் தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மாவதி வேடத்தில் நடித்துவருகிறார். 

இப்படத்தில் தீபிகா படுகோனே ஜோடியாக ஷாகித் கபூர் நடித்துள்ளார். வருகிற டிசம்பர் மாதம் 1ம் தேதி திரைக்கு வருவதாக இருந்த இத்திரைப்படம், சித்தூர் ராணி பத்மாவதி வரலாற்றை தவறாக சித்தரிக்கப் பட்டிருப்பதாக தொடர்ந்து ராஜ்புத் சமூகத்தினரிடையே எதிர்ப்புகள் தெரிவித்து வந்தனர். மேலும் படத்தினை வெளியிடுவதற்கு ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.     

 

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி படத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இரண்டு பக்க தரப்பினையும் விசாரித்த வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா சர்சைக்குரிய காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருப்பதால் மீண்டும் படத்தினை தணிக்கை குழுக்கு அனுப்ப வேண்டுமென மனுவை தாக்கல் செய்தார்.    

இந்நிலையில் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் ஏற்பட்ட பல சர்ச்சையின் காரணத்தினால் டிசம்பர் 1ம் தேதி வெளியிடுவதாக இருந்த இப்படத்தினை தள்ளி வைத்திருப்பதாக கூறினார். மேலும் எந்த தேதியில் வெளியிடப்படும் என்று எவ்வித தகவலையும் இயக்குனர் வெளிப்படுத்தவில்லை. 

 


பத்மாவதி ரிலீஸ் தேதியை தள்ளிவைத்த இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி


செய்தியாளர் பற்றி

அடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர். ... மேலும் படிக்க

Yasodha senior editor and writer

யசோதாமூத்த எழுத்தாளர்