சென்னையில் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு துவக்கம்

       பதிவு : Nov 29, 2017 12:24 IST    
vishwaroopam 2 movie vishwaroopam 2 movie

நடிகர் கமல் ஹாசன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் படம் 'விஸ்வரூபம் 2'. கடந்த 2013-ஆம் ஆண்டு 'விஸ்வரூபம்' முதல் பாகம் வெளியானது. இதனை தொடர்ந்து விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை விஸ்வரூபம் இயக்கும் போதே சில காட்சிகளை கமல்ஹாசன் இயக்கியுள்ளார். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பாதியில் நின்றது. இதனை அடுத்து 'விஸ்வரூபம் 2' படத்தின் உரிமையை குறிப்பிட்ட தொகையை கொடுத்து கமல் ஹாசன் வாங்கி படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளை தொடர்ந்தார். 

அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த வேளையில் அரசியலில் கவனத்தை திருப்பினார். விஸ்வரூபம் 2 இப்போதைக்கு வராது என்று ரசிகர்கள் நினைத்திருக்கும் வேளையில் சென்னையில் 'விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார். இன்னும் சில காட்சிகள் மட்டும் மீதம் இருப்பதால் விரைவில் படம் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்திற்குஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 


சென்னையில் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு துவக்கம்


செய்தியாளர் பற்றி

அடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர். ... மேலும் படிக்க

Yasodha senior editor and writer

யசோதாமூத்த எழுத்தாளர்