ads

மார்ச் 8இல் வெளியாகும் தனுஷின் வடசென்னை பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் வட சென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மார்ச் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் வட சென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மார்ச் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக 'வேலையில்லா பட்டதாரி 2' படம் வெளியானது.  இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா', இயக்குனர் வெற்றிமாறனின் 'வடசென்னை' மற்றும் இயக்குனர் பாலாஜி மோகன் தற்போது இயக்கி வரும் 'மாரி 2' போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் 'வடசென்னை' படத்தின் முதற்பகுதி நிறைவடைந்ததாக சமீபத்தில் படக்குழு தெரிவித்தது.

மூன்று பாகமாக உருவாகவுள்ள இந்த படத்தின் முதற் பகுதி தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் ராம், பருத்தி வீரன், ஆதி பகவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அமீர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிசோர், கருணாஸ், சுப்ரமணிய சிவா, பவன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் 1970 களில் நடக்கும் காட்சிகள் சமீபத்தில் படமாக்க பட்டது.

இந்த படத்தை நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஷ்கரன் ஆகியோர் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனங்கள் சார்பில் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மார்ச் 8ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு துவங்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மார்ச் 8இல் வெளியாகும் தனுஷின் வடசென்னை பர்ஸ்ட் லுக் போஸ்டர்