ads

டிஜிட்டல் இந்தியா ஆதார் குறித்து தவறான காட்சிகள் இரும்புத்திரை படத்திற்கு தடை கோரி மனு

ஆதார் மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை குறித்து தவறான காட்சிகள் இருப்பதாக இரும்பு திரை படத்தின் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆதார் மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை குறித்து தவறான காட்சிகள் இருப்பதாக இரும்பு திரை படத்தின் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதுமுக இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'இரும்புத்திரை'. இந்த படம் வரும் மே 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தாவும், வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுனும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காக அழுத்தமான கதையை உருவாக்கியுள்ளார் பிஎஸ் மித்ரன். சமீபத்தில் இந்த படத்தின் டீசர், ட்ரைலர் வெளியானதை தொடர்ந்து இந்த படத்தின் இசையை இன்று படக்குழு வெளியிட உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் மோடியின் டிஜிட்டல் இந்தியா குறித்து தவறான கருத்து இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாமக்கல் தத்தியாபுரத்தை சேர்ந்த நடராசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் "நடிகர் விஷால், சமந்தா, அர்ஜுன் ஆகியோரது நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள படம் இரும்புத்திரை. இந்த படத்தில் ஆதார் அட்டை மற்றும் அதன் தகவல்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியாவின் திட்டத்தினால் பொது மக்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆதார் அடையாள அட்டை திட்டம் குறித்து தவறான கருத்துக்களை இந்த படத்தில் பதிவு செய்திருப்பது ஏற்க முடியாத ஒன்று. இந்த காட்சிகள் நீக்கப்படாமல் வெளியானால் பொதுமக்களுக்கு ஆதார் குறித்து தேவையற்ற அச்சம் ஏற்படும், மத்திய அரசின் மீதுள்ள நம்பிக்கையையும் பொது மக்கள் இழக்க நேரிடும், ஆகையால் இதுபோன்ற காட்சிகள் நீக்கப்படும் வரை இந்த படத்தை திரையிட அனுமதிக்க கூடாது" என அவர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

டிஜிட்டல் இந்தியா ஆதார் குறித்து தவறான காட்சிகள் இரும்புத்திரை படத்திற்கு தடை கோரி மனு