ads

கரு இசை வெளியீட்டு விழாவில் ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் ஏஎல் விஜய்

Director AL Vijay Speech At Karu Movie Audio Launch at Chennai

Director AL Vijay Speech At Karu Movie Audio Launch at Chennai

நடிகை சாய் பல்லவி தமிழில் நாயகியாக அறிமுகமாகும் முதல் படம் 'கரு'. இந்த படத்தை இயக்குனர் இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை சாய் பல்லவி "பிரேமம் படத்தில் பிரபலமான பிறகு தமிழில் எப்போது நடிப்பீர்கள் என அனைவரும் கேட்டு கொண்டிருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு 'கரு' படத்தின் கதையை கேட்ட பிறகு ஒப்புக்கொண்டேன். இதுபோன்ற நல்ல கதைக்காக தான் இத்தனை நாட்களாக காத்திருந்தேன். இந்த படத்தில் பேபி வெரோனிகா முக்கிய கதாபாத்திரத்தில் அழகாக நடித்துள்ளார். இந்த படத்தில் பணிபுரிந்து புதுவித அனுபவம்." என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பேசிய இயக்குனர் ஏஎல் விஜய் "'கரு படம் எடுப்பது இறுதியாக முடிவான பிறகு முதலில் வேறு குழந்தையை தான் நடிக்க வைத்தோம். அந்த குழந்தையை வைத்து தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டோம். ஆனால் இந்த படத்தில் அந்த குழந்தை நடிக்க மறுத்துவிட்டது. இதன் பிறகு ஒரு விளம்பர படத்தில் பேபி வெரோனிகா நடிப்பதை பார்த்த பிறகு தான் இந்த படத்தில் நடிக்க வைத்தோம். இந்த விஷயத்தை இப்போது தான் சொல்கிறேன். இது சாய் பல்லவிக்கு கூட தெரியாது." என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு உரையாடினர்.

கரு இசை வெளியீட்டு விழாவில் ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் ஏஎல் விஜய்