ads

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் வெளியிட்ட ஜருகண்டி பர்ஸ்ட் லுக் போஸ்டர்

director ar murugadoss release jarugandi movie first look poster

director ar murugadoss release jarugandi movie first look poster

நடிகர் ஜெய் நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 'கலகலப்பு 2' படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் 'பார்ட்டி' படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை அடுத்து நடிகர் ஜெய் 'எத்தன்' படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில் 'நீயா 2' என்ற படத்திலும், அறிமுக இயக்குனர்களான ஷியாம் மற்றும் பிரவின் ஆகியோர் இணைந்து இயக்கவுள்ள 'மாங்கல்யம் தந்துனானே னா' என்ற படத்திலும், இயக்குனர் பிச்சுமணி இயக்கும் 'ஜருகண்டி' படத்திலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

இதில் இயக்குனர் பிச்சுமணி எழுதி இயக்கும் 'ஜருகண்டி' படத்தில் நாயகனாக நடிகர் ஜெய் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மற்றும் மாடல் அழகியான ரெபா மோனிகா ஜான் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் ஜெய் மற்றும் பல திரை வட்டாரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'பார்ட்டி' படத்தில் கீர்த்தி என்ற காதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த படம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் முதல் படமாகும். இதனை தொடர்ந்து ஜெய்யின் 'ஜருகண்டி' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் முன்னதாக மலையாளத்தில் 'ஜகொபின்டெ சுவரகராஜ்யம்' மற்றும் 'பைப்பின் சுவாடேலே ப்ரணயம்' போன்ற இரு படங்களில் நடித்துள்ளார்.

இதில் 'ஜகொபின்டெ சுவரகராஜ்யம்' என்ற படம் மலையாளத்தில் அறிமுகமான முதல் படமாகும். பின்னர் ஜெய்யுடன் இணைந்து நடிக்கும் 'ஜருகண்டி' படத்தில் ரோபோ சங்கர், மைம் கோபி, இளவரசு, டேனியல் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தை ஷ்ரத்தா என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் நிதின் சத்யா ப்ரொடக்சன் அவுஸ் போன்ற நிறுவனங்கள் சார்பில் பத்ரி கஸ்தூரி மற்றும் நிதின் சத்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். இந்த படத்திற்கு போபோ ஷாஷி இசையமைத்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். 

director ar murugadoss release jarugandi movie first look posterdirector ar murugadoss release jarugandi movie first look poster

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் வெளியிட்ட ஜருகண்டி பர்ஸ்ட் லுக் போஸ்டர்