ads

அலைபாயுதே பாடல் வரியில் ஜெய்யின் புது பட டைட்டில்

jai new film updates

jai new film updates

சுந்தர் சி இயக்கத்தில் 'அவ்னி சிமெக்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் குஷ்பு சுந்தர் சி தயாரித்து வரும் 'கலகலப்பு 2' படத்தில் ஜெய், ஜீவா, நிக்கிகல்ரானி, கத்ரின் தெரசா, மிர்ச்சி சிவா உள்பட பல திரைப்பட நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தினை தொடந்து நடிகர் ஜெய் ஒரு புது படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது.       

அறிமுக இயக்குனர்கள் சியாம் மற்றும் பிரவீன் இணைந்து இயக்கவுள்ள இப்படத்திற்கு 'மாங்கல்யம் தந்துனா னே னா’ என்ற தலைப்பினை வந்துள்ளனர். இந்த தலைப்பு ஆர் ரகுமான் இசையில் 'அலைபாயுதே' படத்தில் இடம் பெற்ற பாடல் வரிகளில் ஒன்று என்பது குறிப்பிட தக்கது. மேலும் ஜெய் நடிக்கவிக்கும் இந்த புது படத்தில் இரு நாயகிகள் களமிறங்க உள்ளனர். இதில் 'குரங்கு பொம்மை’ புகழ் டெல்னா டேவிஸ் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் மற்றொரு நாயகிக்கான தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காமெடியில் டேனியல் அன்னி போப் நடிக்கவிருக்கிறார்.   

தற்பொழுது ப்ரீ-ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் ஷான் ரஹ்மான் இணைந்துள்ளார்.  வருகிற மே மாதத்தில் துவங்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் நடிக்க இருக்கும் இதர நடிகர் -நடிகைகள், தொழில் நுட்ப கவிஞர்கள் பட்டியலை விரைவில் வெளியிட உள்ளனர்.       

அலைபாயுதே பாடல் வரியில் ஜெய்யின் புது பட டைட்டில்