ads
ஆக்சன் கிங் இயக்கியுள்ள சொல்லிவிடவா படத்தின் கதை
வேலுசாமி (Author) Published Date : Jan 30, 2018 16:56 ISTபொழுதுபோக்கு
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் போன்ற பல திறமைகளை கொண்டுள்ள ஆக்சன் கிங் அர்ஜுன் தன்னுடைய 19 வது வயதில் இருந்து தன்னுடைய திரையுலக பயணத்தை ஆரம்பித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் 37 ஆண்டுகளில் தற்போது வரை 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இயக்குனர் ராம நாராயணன் இயக்கத்தில் 1984ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'நன்றி' திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இவருடைய இயக்கத்தில் தற்போது 14 வது படமாக 'சொல்லிவிடவா' படம் உருவாகியுள்ளது. இந்த படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் கன்னட நடிகரான சந்தன் குமார் நாயகனாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக ஆக்சன் கிங் மகள் ஐஸ்வர்யா இணைந்துள்ளார். இந்த படம் தமிழில் 'பட்டது யானை' படத்திற்கு பிறகு இவர் நடிக்கும் இரண்டாவது படமாகும். கன்னட நடிகரான சந்தன் குமாருக்கு இந்த படம் தமிழில் அறிமுகமாகும் முதல் படமாகவும் அமைந்துள்ளது. இது குறித்து ஆக்சன் கிங் கூறுகையில் "இந்த படம் நான் இயக்கும் 14வது படமாகும். இந்த படம் என் மகள் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது படம். தற்போது வரை ஆக்சனுக்கு முக்கியத்துவம் தந்த நான் தற்போது காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளேன். ஆனாலும் இந்த படத்தில் தேச பக்தி நிறைந்துள்ளது. இந்த படம் கார்கில் போர் பின்னணியில் அமைக்க பட்டுள்ளது.
சந்தன் குமார், ஐஸ்வர்யா வெவ்வேறு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள். அப்போது ராணுவ போர்க்களத்துக்கு வேலை சம்பந்தமாக செல்கிறார்கள். அங்கே ராணுவ வீரர்களின் தியாகம், அவர்களின் சேவை போன்றவை இருவரையும் பாதிக்கிறது. அதன் பிறகு இருவரும் காதலிக்கிறார்கள். பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை. நானும் இந்த படத்தில் கடவுள் ஆஞ்சநேயர் பக்தராக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளேன். இந்த படம் நான் நடிக்கும் 125வது படம். இந்த படத்தின் மூலம் ராணுவ வீரர்களுக்கு பெருமை கிடைக்கும். தணிக்க வாரியம் சிறு காட்சிகளை கூட நீக்காமல் இந்த படத்திற்கு யு சான்றிதழ் அளித்துள்ளது. இந்த படத்தில் போர்க்களம் சம்பந்தப்பட்ட காட்சிகளை சிரமப்பட்டு எடுத்துள்ளோம்." என்று அவர் தெரிவித்துள்ளார்.