இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்ட கர்மா பர்ஸ்ட் சிங்கிள் பாடல்

       பதிவு : Mar 03, 2018 18:32 IST    
இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்ட கர்மா பர்ஸ்ட் சிங்கிள் பாடல்

மா மற்றும் லக்ஷ்மி போன்ற குறும்படங்களை இயக்கி திரை வட்டாரங்களை கவர்ந்த இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்'. இந்த படத்தில் நடிகர் சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார், கிஷோர், விவேக் ராஜகோபால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஏஆர் முருகதாஸ் ஆகியோர் வெளியிட்டனர். இதனால் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து இந்த படத்தை வலுப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் மாதவன் ஆகியோர் இணைந்து இந்த படத்தின் ட்ரைலரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டனர்.

 

த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியான சில மணிநேரங்களில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் 'கர்மா' என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிளை இயக்குனர் கவுதம் மேனன் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி என்பவர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் சுந்தர் அண்ணாமலை டைம்லைன் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

மேலும் இந்த படத்தை இயக்குனர் சர்ஜுன் எழுதி இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் சர்ஜுன், நடிகை நயன்தாரா நடிக்க உள்ள புது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை அறம் படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

 


இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்ட கர்மா பர்ஸ்ட் சிங்கிள் பாடல்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்