ads

கௌதம் மேனனின் மல்டி ஹீரோ படத்தில் அனுஷ்கா

guatham menon anushka to team up

guatham menon anushka to team up

அருந்ததி, ருத்ரமா தேவி, பாகுபலி 1&2 போன்ற வரலாற்று சார்ந்த படங்களில் நடித்து ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பினை பெற்றுள்ள நடிகை அனுஷ்கா தற்பொழுது மீண்டும் ஒரு வரலாற்றினை சார்ந்த 'பாகமதி' என்ற அதிரடி தில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை அசோக் என்பவர் இயக்கிவருகிறார். இது வரை வெளிவந்த படத்தின் போஸ்டர், டீசர், ட்ரைலர் மற்றும் இசை போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் ட்ரைலரில் வெளிவந்த அனுஷ்காவின் வசனத்திற்கு ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பை பெற்று வருவதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.    

இந்த படத்தினை தொடந்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கவுள்ள மல்டி ஹீரோ படத்தில் அனுஷ்கா நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. தற்பொழுது கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா, சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்த படங்களின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்பொழுது நடைபெற்று வரும் இந்நிலையில் கௌதம் மேனனின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடிகை அனுஷ்கா நடிப்பில் ஒரு புது படத்தினை இயக்கவுள்ளார். இந்த படம் நாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில் உருவாகவிருப்பதாக தகவலில் வெளிவந்துள்ளது.  

மேலும் இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் 'கோலி சோடா 2' படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் விஜய் மில்டன் இயக்கிவருகிறார். மேலும் மில்டனுக்கு சொந்தமான ‘ரஃப் நோட் புரொடக்ஷன்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவரே படத்தினையும் தயாரித்து ஒளிப்பதிவு பணியையும்  மேற்கொண்டு வருகிறார். இயக்குனர் கௌதம் மேனனுடன் இணைந்து இப்படத்தின் முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி இணைந்துள்ளார்.  

கௌதம் மேனனின் மல்டி ஹீரோ படத்தில் அனுஷ்கா