நடிகை அனுஷ்காவின் 'பாக்மதி' டீசர்

       பதிவு : Dec 19, 2017 17:16 IST    
bhagmati teaser release tomorrow bhagmati teaser release tomorrow

'அருந்ததி' படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனுஷ்கா, தமிழில் வேட்டைக்காரன், தெய்வ திருமகள், வானம், சிங்கம், லிங்கா, பாகுபலி, ருத்ரம்மா தேவி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதில் சிங்கம், பாகுபலி, அருந்ததி போன்ற படங்கள் வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களாக அமைந்தவை. இது தவிர தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் 40 கும் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி 2 மூலம் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்த இவர் தற்போது 'பாக்மதி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜி.அசோக் இயக்குகிறார். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு எஸ்.தாமன் இசையமைக்கிறார். 

இந்த படத்தை யுவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் சார்பில் வம்சி கிருஷ்ண ரெட்டி தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் அனுஷ்கா, ஆதி, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அனுஷ்காவின் பிறந்த நாளான நவம்பர் 7-இல் படக்குழு வெளியிட்டது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் டீசரை நாளை படக்குழு வெளியிடுவதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

 

bhagmati teaser tomorrowbhagmati teaser tomorrow

நடிகை அனுஷ்காவின் 'பாக்மதி' டீசர்


செய்தியாளர் பற்றி

புருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க

purusoth

புருசோத்தமன்எழுத்தாளர்