ads
நாடக மேடை படத்தின் கதையை சொல்லும் கார்த்திக் நரேன்
வேலுசாமி (Author) Published Date : Feb 17, 2018 14:30 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு, நரகாசூரன் படத்தை தொடர்ந்து மூன்றாவது படமான 'நாடக மேடை' படத்தை இயக்க உள்ளார். தற்போது 'நரகாசூரன்' படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படம் வரும் மே மாதம் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
'நாடக மேடை' படத்தை கார்த்திக் நரேன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நைட் நாஸ்டால்ஜியா பில்மொடெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்க உள்ளார்.இந்த படத்திற்கு 'நரகாசூரன்' படத்திற்கு இசையமைத்த ரோன் இதன் யோகன் இசையமைக்க உள்ளார்.
இந்த படம் குறித்து இயக்குனர் கார்த்திக் நரேன் கூறுகையில் "என்னுடைய இரண்டு படங்களும் வெவ்வேறு கதைக்களத்தில் இருக்கும். ஆனால் இந்த படம் ஒரு நேர்மறையான படம், இளைஞர்களுக்கு நிஜ உலகை காண்பிக்கும் விதமாக இந்த படம் அமையும். இந்த படத்தில் என்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களையும் என்னுடைய அனுபவத்தையும் இதில் இணைத்துள்ளேன்.
இந்த படம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் நகரங்களில் நடக்கும் கதையாக உருவாக உள்ளது. இந்த படத்தில் அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடிய பொதுவான விஷயத்தை கையாள உள்ளோம்." இந்த படத்திற்கு சுஜித் சரங் மற்றும் ஸ்ரீஜித் சரங் ஆகியோர் ஒளிப்பதிவு பணிகளையும், எடிட்டிங் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
மேலும் இந்த படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், ரகுமான், பார்த்திபன், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.