ads
இயக்குனர் கார்த்திக் நரேனின் புது பட டைட்டில் நாடக மேடை
வேலுசாமி (Author) Published Date : Feb 15, 2018 18:08 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் கார்த்திக் நரேனின் முதல் படமான 'துருவங்கள் பதினாறு' கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் படமாக உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு சிறந்த கதைக்கான 'IIFA Utsavam Award' விருது கிடைத்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது 'நரகாசூரன்' படம் உருவாகி வருகிறது. இந்த படமும் சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்திற்கு த்ரில்லர் படமான 'மாயா' படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரோன் இதன் யோஹன் இசையமைத்து வருகிறார்.
இந்த படம் வரும் மே மாதம் 4-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து கார்த்திக் நரேனின் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு முன்னதாக வெளிவந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'நரகாசூரன்' படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் ரோன் இதன் யோஹன் இசையமைக்கும் இந்த படத்தின் தலைப்பு 'நாடக மேடை' என்று வைக்கப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில் 'அர்த்தமற்ற மேடையில் மனிதர்கள் வாழும் சூழ்நிலைக்கு பெயர் தான் வாழ்க்கை' மேலும் 'மனிதன், வாழ்க்கையில் இன்பம், கஷ்ட நஷ்டம், சந்தோசம், குடும்பம் போன்ற அனைத்தையும் சந்தித்து இறுதியாக அவன் செல்லும் இடம் மயானம்' என்ற கருத்தை பதிவு செய்துள்ளனர். மனிதனின் வாழ்க்கையை பற்றி பேசும் படமாக உருவாக உள்ள இந்த படத்தை 'துருவங்கள் பதினாறு' படத்தை தயாரித்த நைட் நோஸ்டாலக்கிய பிலேமோடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.