ads
நரகாசூரன் படத்தின் டீசர் வெளியீடு
மோகன்ராஜ் (Author) Published Date : Nov 21, 2017 20:19 ISTபொழுதுபோக்கு
துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் அதிரடி த்ரில்லரான 'நரகாசூரன்' படத்தினை இயக்கிவருகிறார். இந்த படத்தில் தனி ஒருவன் அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், மலையாள நடிகர் இந்திரஜித், ஸ்ரேயா, மிசையமுறுக்கு படத்தின் நாயகி ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பஸ்ட் லுக் முன்னதாகவே வெளியிட்டிருந்தனர். கார்த்திக் நரேனின் சொந்த ஊரான ஊட்டியில் படத்தின் அனைத்து காட்சிகளையும் படமாக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் கெளதம் மேனன் தயாரித்த இப்படத்தில் ரான் எத்தன் யோஷான் இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிடவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழுவினர் இரங்கி உள்ளனர்.
இந்நிலையில் படத்தின் டீசர் நவம்பர் 25ம் தேதி படக்குழுவினர் வெளியிடுவுள்ளனர். இன்று வெளிவந்த புது வித போஸ்டரை பார்க்கும் போது படத்தில் அதிகளவு த்ரில்லர் காட்சிகள் இடம் பெற்றிருப்பது போன்று தெரிகிறது.