ads
அதர்வாவின் பூமராங் ட்ரைலரை வெளியிடவுள்ள இயக்குனர் மணிரத்னம்
வேலுசாமி (Author) Published Date : Aug 02, 2018 10:08 ISTபொழுதுபோக்கு
கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன் போன்ற படங்களை இயக்கியுள்ள இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'பூமராங்'. அதர்வா நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். காதல் கலந்த ஆக்சன் படமான இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஷங்கரின் 'ஐ' படத்தில் வில்லனாக நடித்துள்ள உபேன் படேல் நடித்துள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தின் ட்ரைலரை இயக்குனர் மணிரத்னம் அவர்கள் நாளை காலை 10:20 மணியளவில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம் கொண்டான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கண்ணன், இதற்கு முன்பு இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் இணைந்து கன்னத்தில் முத்தமிட்டாள், ஆயுத எழுத்து, குரு போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மேலும் இவன் தந்திரன் படத்திற்கு பிறகு இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நாளை 9 மணியளவில் சத்யம் சினிமாஸில் நடக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.