ads

பாலாவின் தெலுங்கு ரீமேக் படத்திற்கு வசன எழுத்தாளர் பிரபல இயக்குனர்

joker ditector raju murugan joins varma teams

joker ditector raju murugan joins varma teams

தெலுங்கு திரையுலகில் கடந்த ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சம் மற்றும் பாக்ஸ் ஆபிசில் பல வெற்றியை புரிந்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தினை தமிழில் ரீமேக் செய்யும் பணியில் இயக்குனர் பாலா ஈடுபடவிருப்பதாக தகவல்கள் முன்பே வெளிவந்தது. இந்த படத்தின் மூலம் முன்னணி நடிகர் சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். மேலும் இப்படத்தில் 'வர்மா' என்ற டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த நாட்களில் வெளிவந்து வலைத்தளத்தில் மிக பெரும் அளவிற்கு ட்ரெண்ட் ஆனாது.   

தற்பொழுது ப்ரீ -ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் படத்திற்கு வசன எழுத்தாளராக இயக்குனர் ராஜு முருகன் இணைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இவர் திரைப்பட இயக்குநர், பத்திரிக்கையாளர், திரைக்கதை எழுத்தாளர், எழுத்தாளர் போன்ற திறமைகளை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ராஜு முருகன்  கடந்த 2014ம் ஆண்டில் இயக்கிய 'குக்கூ' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் இயக்கத்தில் வெளிவந்த 'ஜோக்கர்' படம் ரசிகர்கள் மற்றும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் இப்படம் சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதினையும் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருதினை 64 ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் திரைப்பட துறைக்கு வருவதற்கு முன்பாகவே ஆனந்த விகடன் இதழில் வட்டியும், முதலும், ஒன்று, ஜிப்ஸி போன்றவை இவரது படைப்புகளில் வெளிவந்தது. 

பாலாவின் தெலுங்கு ரீமேக் படத்திற்கு வசன எழுத்தாளர் பிரபல இயக்குனர்