ads
ரஜினியின் 2.0 படம் 100 நிமிடங்கள் மட்டுமே
மீனா ஸ்ரீ (Author) Published Date : Jan 13, 2018 11:24 ISTபொழுதுபோக்கு
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி சாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள '2.0' படத்தினை லைக்கா ப்ரொடெக்சன் சார்பில் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தை அதிகளவு பட்ஜட்டில் பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு 'இசைப்புயல்' ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர், இசை போன்றவை ரசிகர்கள் கவரும் வகையில் மிகவும் பிரமாண்டமாக வெளியிட்டனர். இந்த படத்தின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே இருக்கும் இந்நிலையில் படத்தினை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியிடுவதாக தகவல்கள் முன்பு வந்திருந்தது. ஆனால் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடிக்க கால அவகாசம் தேவைப்பட்டதால் ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவு செய்தது.
இதனை உறுதி படுத்தும் விதமாக ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பில் சங்கரின் '2.0' படம் ஏப்ரல் 14-இல் வெளியிடுவதாக அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தார். இதனை அடுத்து இந்த படத்தின் டீசரை மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர விழாவில் வெளியிடுவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதனை படக்குழு மறுத்தது. இந்த படத்தின் கிராபிக்ஸ் மற்றும் விஎப்எக்ஸ் காட்சிகள் மிகுந்த பொருட்செலவில் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படம் ஹாலிவுட்டிலும் வெளியிட உள்ளனர். ஹாலிவுட்டில் வெளியாகும் படங்கள் 2 மணி நேரத்திற்கும் குறைவானதாக இருக்கும். தற்போது 400 கோடி செலவில் உருவாகும் சங்கரின் 2.0 படமும் 100 நிமிடங்கள் மட்டுமே என்று தகவல் வந்துள்ளது. அதாவது 1மணிநேரம் 40 நிமிடங்கள் மட்டுமே திரையிடப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.