சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் '2.0' ரிலீஸ் தேதி அறிவிப்பு

       பதிவு : Dec 30, 2017 15:32 IST    
enthiran 2.0 movie release date announced in rajinikanth fans meeting enthiran 2.0 movie release date announced in rajinikanth fans meeting

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி சாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள '2.0' படத்தினை லைக்கா ப்ரொடெக்சன் சார்பில் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தை  அதிகளவு பட்ஜட்டில்  பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர், இசை போன்றவை ரசிகர்கள் கவரும் வகையில் மிகவும் பிரமாண்டமாக வெளியிட்டனர். இந்த படத்தின் எதிர்பார்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே இருக்கும்  இந்நிலையில்  படத்தினை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியிடுவதாக தகவல்கள் முன்பு வந்திருந்தது. ஆனால் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடிக்க கால அவகாசம் தேவைப்பட்டதால் ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 

இந்த படம் ரோபோட் சார்ந்த படம் என்பதால் கிராபிக்ஸ் பணிகளை மிகுந்த பொருட்செலவில் கையாண்டு வருகின்றனர். இதனால் வெளியீடு தேதி மீண்டும் தள்ளி போகலாம் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த படத்தின் வெளியீடு தேதியை ரஜினிகாந்த் தற்போது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். நாளை வரை இந்த ரசிகர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த ரசிகர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் சங்கரின் '2.0' படம் ஏப்ரல் 14-இல் வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் சூப்பர் ஸ்டாரின் '2.0' படம் ரிலீஸ் தேதி தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் '2.0' ரிலீஸ் தேதி அறிவிப்பு


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்