ads

பத்மாவதி படத்தினை பாராட்டிய முன்னணி இயக்குனர்

director shankar wishes padmavati teams

director shankar wishes padmavati teams

பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் உருவான வரலாற்று சார்ந்த படமான 'பத்மாவதி' படத்திற்கு பல எதிர்ப்புகள் நிலவி வந்தது. இந்த படம் ராஜஸ்தானில் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் ராணி பத்மினி அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை தவறுதலாக சித்தரிக்கப்பட்டதின் காரணத்தினால் ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர். பல எதிர்ப்புகளுக்கிடையில் ஜனவரி 25ம் தேதி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சனங்கள் மற்றும் வசூல் ரீதியிலும் நல்ல வெற்றியை பெற்று வருகின்றனர்.      

இந்த படத்தில் இருந்து சர்சைக்குரிய 23 காட்சிகள் நீக்கப்பட்டும் ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் திரையுலகை சார்ந்தவர்கள் மத்தியில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரைப்பட முன்னணி இயக்குனர் சங்கர் இப்படத்தினை பார்த்து அவரது ட்விட்டரில் 'அற்புதமான காட்சியமைப்பு. அற்புதமாக ஒளிப்பதிவாளர் சுதீப் வேலையை கையாண்டுள்ளார். மேலும் தீபிகா படுகோனே, ஆடை அலங்காரம், பாடல் உள்பட படக்குழு அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளார்' என்று அவரது ட்விட்டரில் பதிவு செய்து பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார்.  

பத்மாவதி படத்தினை பாராட்டிய முன்னணி இயக்குனர்