ads

சங்கமித்ரா படத்தின் தகவலை வெளியிட்ட சுந்தர் சி

sangamithra shoot from april or may

sangamithra shoot from april or may

அரண்மனை 2 த்ரில்லர் படத்தினை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாக்கி வரும் காமெடி படமான 'கலகலப்பு 2' படத்தில்  ஜீவா,ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா, மிர்ச்சி சிவா, மனோபாலா, சதீஸ், யோகி பாபு, ரோபோ சங்கர், சிங்கம் புலி, வையாபுரி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது படக்குழு பத்திரிகையாளர்களை சந்துள்ளனர். அதில் பேசிய இயக்குனர் சுந்தர் சி அடுத்து இயக்கவிருக்கும் 'சங்கமித்ரா' படத்தை பற்றிய சில தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் சங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு வருகிற  ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்க இருப்பதாக கூறியுள்ளார். 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் அழகியான ‘சங்கமித்ரா' வின் வாழ்க்கை சரித்திரத்தை படமாக எடுக்கவுள்ளனர். இதில் சங்கமித்ரா தனது ராஜ்ஜியத்தை காப்பாற்றுவதற்காக மேற்கொண்ட சாகசம், சோதனை, துயரம் போன்றவரை மையமாக கொண்டு உருவாகவிருக்கும் இப்படத்தில் சங்கமித்ரா கதாபாத்திரத்தில் ‘M.S.தோனி’ புகழ் தீஷா படானி நடிக்கவுள்ளார். இவருடன் இணைந்து ஜெயம் ரவி, ஆர்யா முக்கிய வேடத்தில் இணையவுள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தினை புகழ் பெற்ற ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்' தயாரிப்பு நிறுவனம் அதிகளவு  பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.      இந்த படத்தில் 'இசை புயல்' ஏஆர்.ரகுமான் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு பணியை மேற்கொள்ள உள்ளார். தற்பொழுது இப்பட்டத்தின் ப்ரீ - ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் மற்ற தகவலை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.          

சங்கமித்ரா படத்தின் தகவலை வெளியிட்ட சுந்தர் சி