ads

இயக்குனர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி டீசர் 2

party character intro teaser

party character intro teaser

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இது வரை வெளிவந்த அனைத்து படங்களும் அதிக அளவு   காமெடிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும். இது அவர் படத்தின் ஸ்பெசல் என்று சொல்லலாம். அந்தவகையில் தற்போது பல  திரையுலக வட்டாரங்களை இணைத்து அவர் இயக்கிவரும் 'பார்ட்டி' படத்திலும் காமெடிகளுக்கு அதிகளவு முக்கியத்தும் கொடுத்துள்ளார்.  இந்த படத்தில் ஜெய், ஷாம், சத்யராஜ், சிவா, ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், நாசர், நிவேதா பெத்துராஜ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அம்மா கிரியேஷன் சார்பில் டீ சிவா தயாரித்துள்ளார். நடிகர் பிரேம்ஜி இசையமைக்கும் இந்த படத்திற்கு ராஜேஷ் யாதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு 30 மணி நேரத்தில் 1மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இதனை தொடர்ந்து பார்ட்டி அணிமல்ஸ் வீடியோவில் இந்த படத்தில் இணையும் நட்சத்திரங்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது டீசரை வெளியிட்டுள்ளார். இந்த டீசரில் ஜெய், சிவா, ரெஜினா, சஞ்சிதா செட்டி, சந்திரன் ஆகியோரின் கதாபாத்திரங்களை தெரிவித்துள்ளார்.   

இயக்குனர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி டீசர் 2