ads

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த டப்ஸ்மாஷ் பிரபலம்

mirnalini ravi joins vijay sethupathi super deluxe

mirnalini ravi joins vijay sethupathi super deluxe

'ஓரம் போ' படத்தின் மூலம் இயக்குனராக தியாகராஜன் குமாரராஜா அறிமுகமானார். அதன் பின்னர் இவர் இயக்கத்தில் வெளிவந்த 'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதினையும்,   சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்க்கான விஜய் விருதுகளையும் பெற்றிருந்தார். தற்பொழுது இவர் இயக்கத்தில் 'சூப்பர் டீலக்ஸ்' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாஸில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின்  உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் இணைத்துள்ளனர்.  

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் சொந்த நிறுவனமான ‘Tyler Durden And Kino Fist’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவரே தயாரித்து வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கேரக்டரில் திருநங்கையாக வளம் வருகிறார். மேலும் சமந்தா வேம்பு என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவர்களின் கதாபாத்திரம் சம்பந்தமான போஸ்டர் மற்றும் டீசர் கடந்த நாள்களில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்திருந்தது.  

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் பிரபல டப்ஸ்மாஸ் புகழ்  'குயின் ஆஃப் டப்ஸ்மாஷ்’ மிருணாளினி ரவி இணைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இயக்குனர்  சுரேஷ் எஸ்.குமார் இயக்கத்தில் கரிஸ்மாடிக் க்ரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி திரைக்கு வரவிருக்கும் 'நகல்' படத்தின் மூலம் திரையுலகிற்கு மிருணாளினி ரவி அறிமுகமாகவுள்ளார். தற்பொழுது விஜய் சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் முக்கிய வேடத்தில் இணைத்துள்ளார். இவர் சம்மந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை மிருணாளினி ரவி அவரது ட்விட்டரில் பதிவு செய்வதோடு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.       

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த டப்ஸ்மாஷ் பிரபலம்