ads
2017 எதிர்பார்ப்பை நழுவவிட்ட திரைப்படங்கள்
புருசோத்தமன் (Author) Published Date : Dec 31, 2017 11:54 ISTபொழுதுபோக்கு
பைரவா:விஜய் ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புகளில் 2017ம் வருடம் பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம், பைரவா. பரதன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், முதன்முறையாக விஜயுடன் இணைந்து, பெரும் எதிர்பார்ப்பில் வழிவந்த இத்திரைப்படம், ரசிகர்களின் அதிக எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்ய தவறிய இந்த வருடத்தின் முதல் படமாகும். ஆனால் வசூலில் இது தோல்வி படம் அல்ல, முதல் நான்கு நாள் பெரும்பாலான திரையரங்குகளில் நிறைந்து காணப்பட்டது.. சில இடங்களில் இந்த படத்தை பணம் அதிகம் கொடுத்து வாங்கிய சிலருக்கு நான்கு நாள் அரங்கம் நிறைந்திருந்தாலும், கடினமாக இருந்தது.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன்:2017ஆம் ஆண்டு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த திரைப்படங்களில் நடிகர் சிலம்பரசன் நடித்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படமும் ஒன்றாகும். மூன்று மாறுபட்ட தோற்றங்களில் நடித்து வெளிவந்த இப்படம், ரசிகர்களின் வரவேற்பை சென்ற ஆண்டு தவறவிட்ட முக்கிய திரைப்படமாகும்.
மொட்ட சிவா கெட்ட சிவா: நடிகரும் இயக்குனருமான இராகவா லாரன்ஸ் நடிப்பில், 'காஞ்சனா 2' படத்திற்கு பிறகு வெளிவந்த திரைப்படம் மொட்ட சிவா கெட்ட சிவா. இராகவா லாரன்ஸ், காவல் துறை அதிகாரியாக நடித்த இத்திரைப்படமும் ரசிகர்களை பூர்த்திசெய்ய தவறிய படமாகும்.
காற்று வெளியிடை:மணி ரத்னத்தின் இயக்கத்தில் 2017ஆம் வெளிவந்த, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் காற்று வெளியிடை. அலைபாயுதே, ஓகே கண்மணி வரிசையில், இளைஞர்களை கவரும் விதத்தில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், எதிர்பார்க்கப்பட்ட வெற்றியும், வாசூலையும் பெற தவறவிட்டது. மணி ரத்னம், ஏ. ஆர். ரஹ்மான் கூட்டணியில் இதற்கு முன் வந்த பாடல்களைப்போல இப்படத்தின் பாடல்கள் அவ்வளவாக பேசப்படவில்லை என்பதும் வருத்தத்திற்குரியது.
விவேகம்:2017ஆம் ஆண்டு அஜித் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம். இயக்குநர் சிவா, நடிகர் அஜித்குமார் கூட்டணியில் மூன்றவது முறையாக இணைந்த இத்திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றிப்படம் என்றாலும் இரண்டு வாரத்திற்கு மேல் அதிக திரையரங்குகளில் ஓடவில்லை. இந்த படம் முழுக்க வெளிநாட்டில் படமாக்கபட்டு, ஹாலிவுட்க்கு நிகராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வேலையில்லா பட்டதாரி 2:வேலையில்லா பட்டதாரியின் இரண்டாம் பாகமாக, நடிகர் தனுஷின் கதையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், மின்சார கனவு படத்திற்கு பின் நடிகை காஜோல் தமிழில் வித்யாசமான கதாபாத்திரத்தில், என ரசிகர்களின் பல எதிர்பார்ப்பில் வெளிவந்த படமாகும். வசூல் ரீதியில் வெற்றி படமாக இருப்பினும், எதிர்பார்த்த வெற்றி அடையாத திரைப்படமாகும்.
ஸ்பைடர்:ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் மகேஷ்பாபுவுடன் முதன்முறையாக இணைந்து வெளிவந்த ஸ்பைடர். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் வெளிவந்த இத்திரைப்படம் வசூல் ரீதியில் சற்று தோல்விப்படமாகும்.
அண்ணாதுரை:முதன்முறையாக இரண்டு மாறுபட்ட வேடங்களில் விஜய் ஆன்டனி நடிப்பில் வெளிவந்த படம் 'அண்ணாதுரை', தனது மாறுபட்ட படங்களின் மூலம் கவரும் விஜய் ஆன்டனி, இப்படத்தின் மூலமாகவும் ரசிகர்களை கவர தவறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
சோலோ:பெஜாய் நம்பியார் இயக்கத்தில், துல்கர் சல்மான் மாறுபட்ட வேடங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் சோலோ. தமிழகத்தில் நடந்த கேளிக்கை வரிப்பிரச்னையால், ரசிகர்களிடம் சென்றடையாத திரைப்படமாகும்.
பிருந்தாவனம்:அழகிய தீயே, மொழி, பயணம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் இராதாமோகன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிருந்தாவனம். பல பெரிய திரைப்படங்களுடன் திரைக்குவந்த இப்படம் வெற்றியை தவறவிட்ட படமாகும்.
கோடிட்ட இடங்களை நிரப்புக:பெரும் எதிர்பார்ப்பில் 2017ம் ஆண்டு, பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் பைரவா, இத்திரைப்படம் வெளியாவதால் பல படங்களின் வெளியீடு தேதி மாற்றினர். இருப்பினும் இயக்குனர் பார்த்திபன், 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்திற்கு பிறகு இயக்கிய படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. தன் இயக்கத்தின் மீது கொண்ட நம்பிக்கையால், 'பைரவா' படத்துடன் வெளியித்தார் இயக்குனர் பார்த்திபன்.இருப்பினும் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் அளவிற்கு 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படம் இல்லை என்பது ரசிகர்களின் முடிவாகும்.
மேற்கூறிய திரைப்படங்கள் வசூல் ரீதியில் வெற்றிபெற்ற திரைப்படங்களாயினும், இப்படங்களின் நடிகர்கள், இயக்குனர்களின் முந்தைய திரைப்படங்களின் வெற்றியே மேற்கூறிய திரைப்படங்களின் ரசிகர்களை எதிர்பார்ப்பை நிர்ணயத்தது. இப்படங்களைப்போல இந்த ஆண்டு வெளிவந்த மெர்சல், புரியாத புதிர், இவன் தந்திரன், சென்னையில் ஒரு நாள் 2 போன்ற பலப்படங்கள் இவ்வரிசையில் உள்ளன.