பூஜையுடன் துவங்கிய ஜிவி பிரகாஷின் புதுப்பட படப்பிடிப்பு

       பதிவு : May 25, 2018 12:56 IST    
இயக்குனர் வசந்த பாலன், ஜிவி பிரகாஷை தமிழ் துறைக்கு இசையமைப்பாளராக வெயில் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர்.  வெயில் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். இயக்குனர் வசந்த பாலன், ஜிவி பிரகாஷை தமிழ் துறைக்கு இசையமைப்பாளராக வெயில் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர். வெயில் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.

நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ், தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பொது மக்களுக்காக அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். இவருடைய நடிப்பில் இயக்குனர் வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செம' படம் இன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் ரவிசந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் பணிபுரிந்துள்ளார்.

தற்போது நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் 10 படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது அடுத்ததாக இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இதற்கான அதிகாரபூர்வ தகவல் வெளியான நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற அபர்ணதி என்பவர் நாயகியாக இணைந்துள்ளார். இயக்குனர் வசந்த பாலன், ஜிவி பிரகாஷை தமிழ் துறைக்கு இசையமைப்பாளராக 'வெயில்' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர்.

 

இவருடைய இயக்கத்தில் வெளியான வெயில், அங்காடி தெரு, அரவான், காவிய தலைவன் போன்ற படங்கள் சிறந்த இயக்குனர், சிறந்த படம் போன்ற விருதுகளை வென்றுள்ளது. தற்போது காவிய தலைவன் படத்திற்கு பிறகு வசந்த பாலன் இயக்கி வரும் இந்த படத்தில் மீண்டும் ஜிவி பிரகாஷ் வெயில் படத்திற்கு பிறகு இணைந்துள்ளார். மேலும் இந்த படத்தை கிரிகெஸ் சினிகிரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீதரன் மரியதாஸ் என்பவர் தயாரிக்க உள்ளார். இந்த படம் இந்த ஆண்டில் வரும் அக்டொபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

Photo Credit - @sri50 (Twitter)Photo Credit - @sri50 (Twitter)
Photo Credit - @sri50 (Twitter)Photo Credit - @sri50 (Twitter)

பூஜையுடன் துவங்கிய ஜிவி பிரகாஷின் புதுப்பட படப்பிடிப்பு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்