ads

நடிகர் ஜிவி பிரகாசுக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் தற்போது ஜிவி பிரகாஷின் செம படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் தற்போது ஜிவி பிரகாஷின் செம படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஜிவி பிரகாஷ் 'நாச்சியார்' படத்தின் வெற்றிக்கு பிறகு செம, 4ஜி, ஐங்கரன், அடங்காதே குப்பத்து ராஜா, சர்வம் தாள மயம் உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் புதுமுக இயக்குனர் வள்ளிகாந்த் என்பவர் இயக்கத்தில் இயக்குனர் பாண்டி ராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'செம' படம் வரும் மே 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் வள்ளிகாந்த் நண்பரின் திருமண வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பசங்க இயக்குனர் பாண்டிராஜ் எழுதி தயாரித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் அர்த்தனா பினு மற்றும் ஜனா என்ற புதுமுகங்கள் திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளனர்.

இவர்களுடன் யோகி பாபு, கோவை சரளா, சுஜாதா சிவகுமார் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்துள்ளனர். இந்த படம் வரும் மே 25ஆம் தேதி வெளியாகவுள்ளதை அடுத்து இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இதற்கு நடிகர் ஜிவி பிரகாஷ் நன்றி தெரிவித்துள்ளார்.  

நடிகர் ஜிவி பிரகாசுக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்