அடுத்த கட்டத்திற்கு சென்ற ஜெய்யின் நீயா 2

       பதிவு : Feb 08, 2018 14:23 IST    
jai horror film neeya 2 second schedule shoot jai horror film neeya 2 second schedule shoot

கடந்த 2011ம் ஆண்டில் விமல் நடிப்பில் வெளிவந்த 'எத்தன்' படத்தின் மூலம் இயக்குனராக சுரேஷ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் தற்பொழுது ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'நீயா 2' படத்தினை இயக்கிவருகிறார்.இந்த படம் உலக நாயகன் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடிப்பில் 1979ம் ஆண்டில் வெளிவந்த ஹாரர் படமான ‘நீயா' படத்தினை போன்று பாம்புகள் பழிவாங்கும் உணர்ச்சியை மையமாக கொண்டு உருவாகி வருகின்றனர். இதன் காரணத்தினால் சுரேஷ் இயக்கிவரும் இப்புது படத்திற்கு 'நீயா 2' என்ற டைட்டில் வைத்துள்ளார். மேலும் இப்படம் நீயா படத்தின் தொடர்ச்சியா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.  

நடிகர் ஜெய் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியராக வலம் வரும் இப்படத்தில் கேத்ரின் தெரசா, ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி சரத்குமார் போன்ற மூன்று நாயகிகள் இணைந்துள்ளனர். இவர்களில் ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி சரத்குமார் இருவரும் ஜெய்யுடன் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நேற்று (7.2.2018) துவாகியிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலை நாயகியாக வளம் வரும் ராய் லக்ஷ்மி அவரது ட்விட்டரில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். விரைவில் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்டர், டீசர், ட்ரைலர், இசை போன்றவை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

 


அடுத்த கட்டத்திற்கு சென்ற ஜெய்யின் நீயா 2


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்