நாடோடியான ஜீவாவின் ஜிப்ஸி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

       பதிவு : Jun 11, 2018 11:20 IST    
இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் நாடோடி கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கவுள்ள ஜிப்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் படபிடிப்பும் நேற்று துவங்கயுள்ளது. இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் நாடோடி கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கவுள்ள ஜிப்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் படபிடிப்பும் நேற்று துவங்கயுள்ளது.

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகருள் ஒருவரான ஜீவா, கலகலப்பு 2, கீ படங்களுக்கு பிறகு கொரில்லா, ஜிப்ஸி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு மீண்டும் விஜயுடன் இணைந்து நடிக்க  உள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜிப்ஸி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் இந்த படம் சாதி, மத கருத்துக்களையும், நாடோடிகளின் வாழ்க்கையையும் உள்ளடக்கியதாக தெரிய வந்துள்ளது.

இந்த படத்தின் நாயகியாக மிஸ் இமாச்சல் மாடலான நடாஷா முஸ்லீம் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ஒலிம்பியா மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை நேற்று படக்குழு துவங்கியுள்ளது. இந்த படம் குறித்து தேசிய விருதுபெற்ற இயக்குனரான ராஜூமுருகன் கூறுகையில் "இந்த படம் முழுக்க முழுக்க பயணம் சார்ந்த படம். பொதுவாக நாடோடிகளுக்கென நிரந்தரமான இருப்பிடம் கிடையாது. அவர்கள் இடத்திற்கு இடம் மாறிக்கொண்டே இருப்பார்கள். இந்த நாடோடி கதாபாத்திரத்தில் தான் ஜீவா சார் நடிக்கிறார்.

 

இதனால் நாடோடி கதாபாத்திரத்திற்கு ஏற்றாவாறு இவருடைய தோற்றம், உடல் பாவனை போன்றவற்றையும் மாற்றியுள்ளோம். இந்த படத்திற்காக இவர் தற்போது கிதார் வாசிக்க கற்று வருகிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருக்கும் அழகான வெள்ளை குதிரை இந்த படம் முழுக்க ஜீவாவுடன் இணைந்து பயணம் செய்ய உள்ளது. இந்த படத்திற்காக நான் இந்தியா முழுவதும் சுற்றி திரிந்து காஷ்மீர், டெல்லி மற்றும் இந்தியாவின் சுற்றுப்புறத்தில் வாழ்ந்து வரும் பல நாடோடிகளை சந்தித்து அவர்களின் வாழ்க்கை முறைகளையும், எண்ணங்களையும் அறிந்து அதில் இருந்து நான் கற்று கொண்ட விசயத்தை இந்த படத்தின் கதையாக உருவாக்கியுள்ளேன். இந்த படம் கமர்சியல் சார்ந்த சிறந்த பொழுதுபோக்கு படம். இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Photo Credit - @Actorjiiva (Twitter)Photo Credit - @Actorjiiva (Twitter)
Photo Credit - @Actorjiiva (Twitter)Photo Credit - @Actorjiiva (Twitter)

நாடோடியான ஜீவாவின் ஜிப்ஸி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்