ads
வெளியானது விஜய் சேதுபதி த்ரிஷாவின் 96 படத்தின் காதலே காதலே சிங்கிள் வீடியோ
மீனா ஸ்ரீ (Author) Published Date : Jul 30, 2018 18:09 ISTபொழுதுபோக்கு
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளரான பிரேம் குமார், ஒரு இயக்குனராக விஜய் சேதுபதி படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவை வைத்து '96' படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் திரிஷா, விஜய் சேதுபதியுடன் முதன் முறையாக இணைந்து நடித்து வருகிறார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதி ஒளிப்பதிவாளர், தற்போது இயக்குனரான பிரேம் குமார் கூட்டணி இணைந்துள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 'ராம்' என்ற கதாபாத்திரத்திலும், திரிஷா 'ஜானு' என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.
முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் 'காதலே காதலே' என்ற பாடலின் சிங்கிள் வீடியோ ஒன்றை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் கோவிந்த் மேனன் இசையமைப்பில் சின்மயி மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோர் பாடியுள்ளனர். மெட்றாஸ் என்டர்ப்ரைசஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் காளி வெங்கட், ஜானகி, ஜனகராஜ், ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.