கலகலப்பு 2 படத்தில் கிருஷ்ணா முகுந்தா புது சிங்கிள் வெளியீடு

       பதிவு : Feb 07, 2018 12:24 IST    
kalakalappu 2 krishna mukundha single video release kalakalappu 2 krishna mukundha single video release

அதிரடி த்ரில்லர் படமான 'அரண்மனை 2' படத்தின் வெற்றியை தொடந்து  இயக்குனர் சுந்தர் சி எழுத்து மற்றும் இயக்கத்தில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கலகலப்பு 2'. இந்த படத்தினை வருகிற பிப்ரவரி மாதம் 9ம் தேதியில் வெளியிட உள்ளனர். இதன் காரணத்தினால் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்த நாளுக்கு நாள் புது புது வீடியோ, இசை, புகைப்படம் போன்றவை படக்குழு வெளியிட்டு வருகின்றனர். கடந்த நாட்களில் வெளியிட்ட படத்தின் டீசர், ட்ரைலர், பிடிச்சிருக்கா இல்ல பிடிக்கலையா வீடியோ பாடல், புகைப்படம் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருவதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.       

இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள 'கிருஷ்ணா முகுந்தா' பாடலை இன்று மாலை 6மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்பொழுது இப்பாடலுக்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 2012ல் வெளிவந்த 'கலகலப்பு' படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை எடுத்து வரும் இப்படத்தில் காமெடி கலந்த அதிரடி சண்டை காட்சிகள் அதிகளவு இடம் பெற்றிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கு 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி இசையமைத்துள்ளார். மேலும் படத்தின் முக்கிய வேடத்தில் யோகிபாபு, முனீஸ்காந்த், சதிஷ், வையாபுரி, மனோபாலா உள்ளிட்ட பல திரைபட  நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.    

 


கலகலப்பு 2 படத்தில் கிருஷ்ணா முகுந்தா புது சிங்கிள் வெளியீடு


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்