ads

இயக்குனர் சுந்தர் சியின் கலகலப்பு 2 ட்ரைலர் வெளியீடு

kalakalappu 2 movie official trailer release

kalakalappu 2 movie official trailer release

நடிகர் மற்றும் இயக்குனரான சுந்தர் சி இயக்கத்தில் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் 'கலகலப்பு 2'. இந்த படத்தை முன்பு வெளிவந்த 'கலகலப்பு' படத்தின் தொடர் கதையாக அல்லாமல் கலகலப்பான புது கதைக்களத்தை அமைத்துள்ளார் இயக்குனர் சுந்தர் சி. இவர் இயக்குனராக 'முறைமாமன்' படத்திலிருந்து தொடர்ந்து 22 வருடங்களாக 30 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மற்றும் நடிகரான மணிவண்ணனின் உதவி இயக்குனராக இருந்தவர்.

இவருடைய இயக்கத்தில் தற்போது வெளிவரவுள்ள படம் 'கலகலப்பு 2'. இந்த படத்தில் நடிகர் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரினா தெரசா, யோகிபாபு, முனீஸ்காந்த், சதிஷ், வையாபுரி, மனோபாலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டொபர் 4 ஆம் தேதி காரைக்குடியில் முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரியின் குணாதிசியங்கள் இயக்குனர் சுந்தர் சிக்கு பிடித்து போன பின்பு முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் வையாபுரியை இணைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து இரண்டு மாதங்கள் காசி, புனே, ஐதராபாத், சென்னை போன்ற இடங்களில் நடந்துள்ளது. இந்த படத்தில் இடம் பெறும் 'ஹோலி' பாடலை வாரணாசியில் உள்ள ராம்நகரில் காட்சிகளை அமைத்துள்ளனர். இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்துள்ளது அதில் சிறப்பு தோற்றத்தில் நடிகை நந்திதா இணைந்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் போஸ்டர், டீசர், இசை போன்றவை வெளிவந்தது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலரை இன்று வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சுந்தர் சியின் கலகலப்பு 2 ட்ரைலர் வெளியீடு