ஐதராபாத்தில் தொடங்கிய கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு

       பதிவு : Mar 15, 2018 15:09 IST    
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கமல் ஹாசன் நடிப்பில் தற்போது விஸ்வரூபம், இந்தியன் 2 போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது புதியதாக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அதற்காக அரசியலில் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.

ஒரு புறம் அரசியல் மறுபுறம் சினிமா என பிஸியாகவே இருக்கும் கமல் ஹாசனுக்கு போட்டியாக நடிகர் ரஜினிகாந்தும் சினிமா, அரசியல் என இரண்டு துறைகளிலும் களமிறங்கியுள்ளார். தற்போது இயக்குனர் சங்கர் கமல் ஹாசன், ரஜினிகாந்தை வைத்து 2.0, இந்தியன் 2 போன்ற படங்களை பிரமாண்டமாக உருவாக்கி வருகிறார்.

 

இதில் '2.0' பட வேலைகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் 'இந்தியன் 2' வில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. ஐதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம்சிட்டி என்ற இடத்தில் தற்போது படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் 'இந்தியன் 2' வின் படப்பிடிப்பில் கமல் ஹாசன் கலந்து கொள்கிறார். இந்த படம் தற்போதுள்ள சூழலுக்கு தகுந்தவாறு அரசியல் சார்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படம் வங்கி மோசடி மற்றும்  அரசியல் ஊழல் போன்றவைகளை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது. 

 


ஐதராபாத்தில் தொடங்கிய கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்