சென்னை 2 சிங்கப்பூர் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

       பதிவு : Dec 17, 2017 13:50 IST    
kamal haasan wishes chennai to singapore kamal haasan wishes chennai to singapore

புதுமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் கோகுல் ஆனந்த் நாயகனாக நடித்து நேற்று வெளிவந்த படம் 'சென்னை 2 சிங்கப்பூர்'. இந்த படம் காமெடிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்ததோடு ‘காமிக்புக் ஃபிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளராகவும் இப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.    

இந்த படத்தில் கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவில் ஈடுபட்டிருந்தார். மேலும் பிரவீன்.கே.எல் படத்தொகுப்பில் பணிபுரிந்துள்ளார். அஞ்சு குரியன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ராஜேஷ் பாலச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். படம் வெளிவந்து ரசிகர்கள், விமர்சனங்கள் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.   

 

இந்நிலையில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் 'வெல்க புகழும் செல்வமும். சென்னை 2 சிங்கப்பூர் குழுவுக்கும் ஜிப்ரனின் முதல் தயாரிப்பு முயற்சிக்கும் வாழ்த்துக்கள்' என்று அவரது ட்விட்டரில் பதிவு செய்து பாராட்டினை தெரிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவர உள்ள 'விஸ்வரூபம் 2' படத்தில் ஜிப்ரான் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

chennai to singapore moviechennai to singapore movie

சென்னை 2 சிங்கப்பூர் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்