ads
நந்தி விருது வழங்குவதில் பாரபட்சம் - இயக்குனர்கள் கண்டனம்
வேலுசாமி (Author) Published Date : Nov 19, 2017 19:10 ISTபொழுதுபோக்கு
சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர் நடிகைகள் என திரைத்துறை கலைஞர்களுக்கு ஆந்திர அரசு ஆண்டுதோறும் அவர்களை கவுரவிக்கும் விதமாக நந்தி விருதுகள் வழங்கி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 2014 -2016 ஆம் ஆண்டுகளுக்கான நந்தி விருதுகளின் பட்டியல்கள் அறிவிக்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் உயரிய விருதான என்டிஆர் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்திருந்தனர். மேலும் சிறந்த நடிகர்களாக பாலகிருஷ்ணா, ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சந்திரபாபு நாய்டுவின் நெருங்கிய உறவினரான பாலகிருஷ்ணா நடித்த 'லெஜண்ட்' படத்திற்கு 9 நந்தி விருதுகளை வழங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விருதுகளுக்கான தேர்வு குழுவில் பாலகிருஷ்ணா மற்றும் நடிகை ஜீவிதா நடுவர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நந்தி விருதுகளை வழங்குவதில் முரண்பாடு இருப்பதாக இயக்குனர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இயக்குனர் பன்னிவாசு கூறும்போது " ஆந்திர அரசு வழங்கும் நந்தி விருதுக்கு சிறந்த படங்கள் தேர்வு செய்யப்படவில்லை. சிரஞ்சீவியின் சகோதர மகன் வருண்தேஜ் நடித்த 'முகுந்தா' படம் சிறந்த படமாக அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த படத்தை நந்தி விருதுக்கு தேர்வு செய்யவில்லை. மேலும் சிரஞ்சீவி குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் விருது கொடுக்காமல் ஒதுக்கிவிட்டனர்." என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குனர் நாகேந்திரா கூறும்போது " நந்தி விருதுகள் தேர்வு நியாயமாக தேர்வு செய்யப்படவில்லை. பாகுபலி படத்திற்கு நான்கு ஆண்டுகள் ஒதுக்கி மிகவும் சிரமப்பட்டு நடித்த பிரபாசுக்கு விருது வழங்காதது கண்டிக்கத்தக்கது." என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இயக்குனர் கத்தி மகேஷ் கூறும்போது " நந்தி விருது தேர்வில் அரசு பாரபட்சமாக நடந்துள்ளது. சிறந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு என்ற அவருக்கும் அவரது மகன், பேரன்களுக்கு மட்டும் இந்த நந்தி விருதுகளை கொடுத்து விடலாம். " என்று எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.