கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு

       பதிவு : Jun 01, 2018 18:03 IST    
கார்த்தியின் 16வது படமான கடைக்குட்டி சிங்கம் படத்தின் டீசர் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தியின் 16வது படமான கடைக்குட்டி சிங்கம் படத்தின் டீசர் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தி கடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கார்த்தியின் அண்ணன் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீடு குறித்து தகவலை தற்போது அறிவித்துள்ளது. இதன்படி இந்த படத்தின் டீசர் வரும் மாதம் ஆம் தேதி படக்குழு வெளியிட உள்ளனர். கடைக்குட்டியாக கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், சாயிஸா என இரு நாயகிகள் இணைந்துள்ளனர். இதில் ப்ரியா பவானி சங்கர் மாமன் மகளாக நடித்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் சத்யராஜ், அர்த்தனா பினு, பானுபிரியா, விஜய் சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமான் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக புதுமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். கார்த்தியின் 17வது படமாக உருவாக உள்ள இந்த படத்திற்கு தனது அண்ணன் மகன் பெயரான 'தேவ்' என்ற தலைப்பை வைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் துவங்க உள்ளனர்.


கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்